Saturday, May 12, 2012

வஸீலா தேடலாமா?



முதலாவது தொடர்
இறந்து போன ஒருவரின் பொருட்டால் அல்லது உயிரோடுள்ள ஒருவரின் பொருட்டால் இறைவனிடம் தேவையை முன்வைப்பதே எமது வழக்கில் வஸீலா என அழைக்கப்படுகிறது வஸீலா எனும் அறபுப் பதம் நெருக்கம் எனும் அர்த்தத்தை உள்ளடக்கியுள்ளது இறைவனிடம் நேரடியா நாம் நெருங்க முடியாது எம்மை விட தரத்தில் உயர்ந்தவர்களின் பொருட்டைக் கொண்டே நெருங்க முடியும் என வஸீலாவை ஆதரிப்போர் வாதிடுகின்றனர் இது இஸ்லாத்தில் சுத்த ஷிர்க்காகும்
வஸீலா என்பது கூடும் என்று வாதிடுபவர்கள் தங்களின் ஷிர்க்கான நடவடிக்கையை நியாயப்படுத்த சில செய்திகளை அவ்வப்போது எடுத்துவைக்கின்றனர் அவர்கள் எடுத்து வைக்கும் செய்திகளின் போலித்தன்மையை சமுதாயத்தில் தோலுரித்து மக்களுக்கு சத்தியத்தை புரிய வைப்பது எமது கடமை என்ற படியால் இவ்வாய்வை இங்கு வெளியிடுகின்றோம்
வஸீலா கூடும் என்று கூறும் அவர்கள் பல செய்திகளை அதற்கு ஆதாரமாக முன்வைக்கின்றனர் அதில் உமர்(ரழி) அவர்கள் சம்பந்தப்படும் செய்தியும் ஒன்றாகும் அந்த செய்தியில் இடம் பெறும் குறைகளை நாம் ஒவ்வொன்றாக எடுத்துக்காட்டவுள்ளோம்
முதலில் அந்த செய்தியை தருகின்றோம்
أَخْبَرَنَا أَبُو نَصْرِ بْنُ قَتَادَةَ ، وَأَبُو بَكْرٍ الْفَارِسِيُّ ، قَالا : أَخْبَرَنَا أَبُو عَمْرِو بْنُ مَطَرٍ ، أَخْبَرَنَا أَبُو بَكْرِ بْنُ عَلِيٍّ الذُّهْلِيُّ ، أَخْبَرَنَا يَحْيَى ، أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ ، عَنِ الأَعْمَشِ ، عَنْ أَبِي صَالِحٍ ، عَنْ مَالِكٍ ، قَالَ : " أَصَابَ النَّاسَ قَحَطٌ فِي زَمَانِ عُمَرَ بْنِ الْخَطَّابِ ، فَجَاءَ رَجُلٌ إِلَى قَبْرِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَقَالَ : يَا رَسُولَ اللَّهِ , اسْتَسْقِ اللَّهَ لأُمَّتِكَ فَإِنَّهُمْ قَدْ هَلَكُوا ، فَأَتَاهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْمَنَامِ ، فَقَالَ : ائْتِ عُمَرَ فَأَقْرِئْهُ السَّلامَ ، وَأَخْبِرْهُ أَنَّكُمْ مُسْقَوْنَ ، وَقُلْ لَهُ : عَلَيْكَ الْكَيْسَ الْكَيْسَ ، فَأَتَى الرَّجُلُ عُمَرَ ، فَأَخْبَرَهُ ، فَبَكَى عُمَرُ ، ثُمَّ قَالَ : يَا رَبُّ ، مَا آلُو إِلا مَا عَجَزْتُ عَنْهُ "
உமர் (رضي الله عنه) அவர்களின் காலத்தில் மக்கள் பஞ்சத்தினால் கஷ்டப்பட்டார்கள். அப்போது ஒரு மனிதர் ரசூல்லாஹ்வின் கப்ருக்கு வருகை தந்து
"அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்விடம் உங்களின் உம்மத்துக்காக வேண்டி மழை பெய்யுமாறு துஆ செய்யுங்கள், ஏனெனில் நிச்சயமாக அவர்கள் அழிந்துவிட்டார்கள்" என்று கூறினார்கள்.

.பின் ரஸுலுல்லாஹ் (صلى الله عليه وسلم)
அவரகள் (அந்த மனிதரின்) கனவில் வந்து " உமரிடம் சென்று (எனது) சலாத்தை கூறுங்கள்" என்றும் இன்னும் "நீங்கள் (மக்கள்) மழை பொழிவிக்கப்படுவீரகள் (எனவும்), நீங்கள் (உமர்) விவேகமாக நடந்து கொள்ளுங்கள், நீங்கள் விவேகமாக நடந்து கொள்ளுங்கள் என்றும் கூறுங்கள்" எனக் கூறினார்.
(பின்) அந்த மனிதர் உமர் (رضي الله عنه) அவர்களிடம் சென்று இதனை அறிவித்தார். (இதனை கேட்ட) உமர் (رضي الله عنه) அழுதார்கள். பிறகு "என்னுடைய இரட்சகனே! எனது சக்திக்கு அப்பாற்பட்டதை தவிர நான் எதையும் முயற்சி செய்யாமலில்லை" என கூறினார்கள்
ஆதாரம்:
தலாயிலுன் நுபுவ்வா
முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா
வஸீலா கூடும் என்பதற்கு இவர்கள் முன்வைக்கும் ஆதாரங்களில் இதுவும் ஒன்றாகும் இப்போது அவர்கள் முன்வைத்துள்ள செய்தியில் காணப்படும் குறைகளை ஒவ்வொன்றாக நோக்குவோம்
மாலிகுத்தாரை ஏன் ஏற்க மறுக்கிறோம்?.

மேற்குறித்த செய்தியில் ஏகப்பட்ட குறைகள் உள்ளன ஒவ்வொரு குறைகளாக இதை அலசுவோம்
முதலாவது குறை: இதில் இடம் பெறும் மாலிக் என்ற அறிவிப்பாளரை ஏற்க முடியாது
முதலில் மாலிகுத்தார் யார்? என்ற விபரத்தை சற்று நோக்குவோம்
இவரது முழுப் பெயர்: மாலிக் இப்னு இயாழ் அல் ஜுப்லானீ(உமர்(ரழி) யின் அடிமை)
இவர் அபூபக்ர்(ரழி), உமர்(ரழி), அபூஉபைதா(ரழி), முஆத்(ரழி) ஆகிய நான்கு ஸஹாபாக்களிடம் கேட்டு அறிவிப்பு செய்துள்ளார் இவரிடமிருந்து அபூஸாலிஹ் அஸ்ஸம்மான், அப்துர்ரஹ்மான், அஃன் இப்னு மாலிக், அப்துல்லாஹ் ஆகியோர் கேட்டு அறிவிப்பு செய்துள்ளனர் உமர்(ரழி) அவர்களோடு பைத்துல் மக்திஸின் வெற்றியில் இவரும் கலந்து கொண்டார்(பார்க்க: தாரீஹு திமிஷ்க்-56-489)
மாலிகுத்தார் சம்பந்தமாக நாம் எடுத்துக் கூறிய மேற்குறித்த கருத்தை எமது எதிர் தரப்பினரும் ஏற்றுள்ளனர் அதனால் அதைப் பற்றி விரிவாக அலச வேண்டியதில்லை
இந்த மாலிகுத்தாரை சில அறிஞர்கள் ஸஹாபி என்றும் சில அறிஞர்கள் அவரை தாபியீ என்றும் கூறுகின்றனர் இதை வைத்து அவர் ஸஹாபியாக இருந்தால் அவரது நம்பகத்தன்மை பற்றி கேள்வி கேட்க முடியாது அவர் தாபியீயாக இருந்தால் தாபியீயாக இருக்கும் அவரை அறிஞர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர் என்று வாதிடுகின்றனர் இந்த வாதம் வெளிப்படையில் நியாயமானதாக தோன்றினாலும் அதில் எவ்வித உண்மையும் கிடையாது
பொதுவாக ஒரு அறிவிப்பாளரை ஏற்றுக் கொள்வதென்றால் அவரது நம்பகத்தன்மை உறுதி செய்யப்படுவது போல் அவரது மனனத் தன்மையும் உறுதிப்படுத்தப்படல் வேண்டும் இதுவே ஹதீஸ்கலையின் விதியும் கூட
ஒருவர் நல்லவராக இருப்பது மாத்திரம் ஹதீஸை ஏற்றுக் கொள்வதற்கு உதவாது மாறாக அவரது மனனத் தன்மையும் உறுதி செய்யப்பட வேண்டும் எமது மாற்றுக்கருத்திலுள்ளவர்கள் கூட தொழுகையில் நெஞ்சில் தக்பீர் கட்டுவது சம்பந்தமான ஹதீஸில் இடம் பெறும் ஸிமாக்கை ஏற்க மறுக்கின்றனர் காரணம் கேட்டால் அவரது மனன சக்தியில் குறை உள்ளது என விமர்சிக்கின்றனர் எனவே நம்பகத்தன்மை எவ்வளவு முக்கியமோ அந்தளவு ஒரு ராவியின் மனனத் தன்மையும் இன்றியமையாத ஒன்றாகும் என்பதை அவர்களும் ஏற்றுள்ளனர். மாலிகுத்தாரை தரப்படுத்திய எந்த அறிஞர்களும் அவரது மனனத் தன்மை பற்றி எதுவுமே கூறவில்லை
.