Saturday, May 12, 2012

வஸீலா தேடலாமா இரண்டாவது தொடர்


முதலில் மாலிகுத்தாரை புகழும் அறிஞர்களின் பட்டியலை வழங்குகிறோம்
1-இமாம் இப்னு ஸஃத்
مالك الدار مولى عمر بن الخطاب وقد انتموا إلى جبلان من حمير وروى مالك الدار عن أبي بكر الصديق وعمر رحمهما الله روى عنه أبو صالح السمان وكان معروفا

கருத்துச்சுருக்கம்:
மாலிகுத்தார் அறியப்பட்டவர் ஆவார்
இமாம் இப்னு ஸஃதினுடைய கூற்றில் மாலிகுத்தாரின் மனனத் தன்மை எதுவும் விபரிக்கப்படவில்லை

2-இமாம் இப்னு ஹிப்பான்:
مالك بن عياض الدار يروى عن عمر بن الخطاب روى عنه أبو صالح السمان وكان مولى لعمر بن الخطاب أصله من جبلان(الثقات-384-5)
மாலிகுத்தார் உமர்(ரழி)யிடமிருந்து அறிவிப்பு செய்கிறார்(அதே போன்று) மாலிகுத்தாரிடமிருந்து அபூஸாலிஹ் என்பவர் அறிவிப்பு செய்கிறார் மாலிகுத்தார் உமர்(ரழி)யின் அடிமையாவார் ஜுப்லான் என்ற பரம்பரையைச் சேர்ந்தவர் ஆவார் (திகாத்-5-384)

இமாம் இப்னு ஹிப்பான் ஒருவரை தரப்படுத்துவதை அறிஞர்கள் எடுத்தவுடன் ஏற்றுக் கொள்வதில்லை காரணம் இனங்கானப்படாத அறிவிப்பாளர்களையெல்லாம் தரப்படுத்தும் வினோத நிலையிலேயே அவர் இருந்துள்ளார் இதனால்தான் இப்னு ஹஜர் கூட இவரது இந்த நிலையை தனது லிஸானுல் மீஸான் என்ற நூலில் ஆச்சரியக் குறியுடன் கூறுகிறார்

ஒரு வாதத்திற்கு இப்னு ஹிப்பானின் கூற்றை ஏற்றுக் கொள்வதாக இருந்தாலும் மாலிகுத்தாரின் மனனத் தன்மையை இப்னு ஹிப்பான் விபரிக்கவில்லை

3-இமாம் இப்னு ஹஜர்: இவரும் தனது இஸாபா என்ற நூலில் மாலிகுத்தாரைப் பற்றிக் கூறுகிறார் ஆனால் அவரது மனனத்தன்மை குறித்து எதுவுமே பேசவில்லை

4-இமாம் இப்னு மயீன்: மாலிகுத்தார் ஒரு முஹத்திஸ் எனக் கூறியுள்ளார் (தாரீஹு திமிஷ்க்-56-491)
இப்னு மயீனின் கூற்றில் கூட மாலிகுத்தாரின்  மனனத்தன்மை விபரிக்கப்படவில்லை

5--இமாம் கலீலீ:
مالك الدار مولى عمر بن الخطاب رضي الله عنه تابعي قديم متفق عليه اثنى عليه التابعون وليس بكثير الرواية (الإرشاد في معرفة علماء الحديث-313-1)
மாலிகுத்தார் பழைய தாபியீ ஆவார் அதுதான் ஏகமனதான முடிவாகும் (ஏனைய) தாபியீன்கள் அவரைப் புகழ்ந்துரைத்தனர் அவர் அதிகம் (ஹதீஸ்களை ) அறிவிப்பு செய்பவரல்ல(அல்இர்ஷாத்1-313)
இது இமாம் கலீலியின் கூற்றாகும் மாலிகுத்தாரின் மனனத்தன்மைய கலீலி இதில் விபரிக்கவில்லை கலீலியின் கூற்றை எடுத்து வைப்பவர்கள் அதில் தங்களுக்கு பாதகமான கருத்து இருக்கிறது என்பதைக் கூட காணத்தவறி விட்டனர் மாலிகுத்தாரை புகழ்ந்துரைத்த இமாம் கலீலி அவர் குறைவாக ஹதீஸ்களை அறிவிப்பவர் என்பதையும் சேர்த்தே கூறுகின்றார் அவரது அந்த வாசகம் மிக முக்கியமானது

இந்த மாலிகுத்தாரைப் பொறுத்தவரை அவரது  மனனத்தன்மை உறுதி செய்யப்படவில்லை மாறாக குறைவாக அறிவிப்பு செய்பவர் என்பதையே இமாம் கலீலியின் வாசக அமைப்பு எமக்கு சுட்டிக்காட்டுகின்றது
இவர் குறைவாக அறிவிப்பு செய்ததினால்தான் இமாம் முன்திரி இமாம் ஹைதமீ போன்றவர்களுக்கு இவரை தெரியாமலிருந்துள்ளது இவரைத் தெரிந்த இப்னு ஸஃத் இப்னு ஹஜர் இப்னு ஹிப்பான் தஹபி போன்றவர்களுக்கு இவரது மனனத் தன்மை தெரியாமலிருந்துள்ளது அதுவும் இவர் ஸஹாபியா? அல்லது தாபியீயா? என்பதிலும் அவர்களுக்கிடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது
இவையனைத்தும் எமக்கு தெட்டத் தெளிவாக மாலிகுத்தாரின் மனனத் தன்மை உறுதி செய்யப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டுகின்றது
எனவே மாலிகுத்தாரின் மனனத் தன்மையை உறுதிப்படுத்தியவர் யார்? என்ற எமது கேள்விக்கு மாற்றுத்தரப்பினர் பதிளலிக்கக் கடமைப்பட்டுள்ளனர் அவர் நல்லவர் என்பதில் நாம் குறை காணவில்லை மாறாக அவரது மனனத் தன்மையைத்தான் இங்கு கேள்வியாக முன்வைக்கிறோம்
இமாம் இப்னு அபீஹாதம் என்பவர் அறிவிப்பாளர்களை தரப்படுத்துவதிலும் குறைகாண்பதிலும் மிக நுணுக்கமானவர் என்பது சகலருக்கும் தெரியும் அந்த இப்னு அபீஹாதம் கூட தனது ஜரஹ் வத்தஃதீல் நூலில் இந்த மாலிகுத்தாரைப் பற்றி குறையோ அல்லது நிறையோ எதுவுமே கூறாமல் சென்றுவிடுகிறார் இது கூட மாலிகுத்தார் பிரபல்யமற்றவர் என்பதை மேலும் ஊர்ஜிதம் செய்கின்றது
கலீலியின் கூற்று அதனை மென்மேலும் ஊர்ஜிதம் செய்கின்றது

ஒரு ராவீ ஸஹாபியா தாபியீனா என கருத்து முரண்பாடு இருந்தால் அவர் இனங்கானப்படாதவரா?
ஒரு அறிவிப்பாளர் ஸஹாபியா? அல்லது தாபியீயா? என்பதில் கருத்து வேறுபாடு வரும் போது அவரை இனங்கானப்படாதவர் என்று கூறும் வழக்கம் அறிஞர்களுக்கிடையில் இருந்துள்ளது மாலிகுத்தார் ஸஹாபியா அல்லது தாபியீயா என்று கருத்து வேறுபாடு வந்த போது அவர் இனங்கானப்படாதவர் என்று நாம் கூறியிருந்தோம் ஆனால் எதிர்தரப்பினர் இதனை மறுத்து கிண்டல் செய்திருந்தனர்
அவர்களின் கிண்டல் வார்த்தை:
"ஒரு ராவீ ஸஹாபியா தாபியீனா என கருத்து முரண்பாடு இருந்தால் அவர் மஜ்ஹுலா?
இது நீர் சுடச் சுட சுட்டு இறக்கிய பொய்!
உமக்கு கூற்றுக்கு ஆதாரம் தர முடியுமா?"
இது அவர்கள் எம்மிடம் வினவிய அம்சமாகும் தற்போது அதற்கான ஆதாரங்களை வழங்குகிறோம்
ஒரு அறிவிப்பாளர் ஸஹாபியா? அல்லது தாபியீயா? என்று கருத்து முரண்பாடு வரும் போது அவரை இனங்கானப்படாதவரின் பட்டியலில் இணைக்கும் வழிமுறை அறிஞர்களுக்கிடையில் இருந்துள்ளது என்பதற்கான ஆதாரங்களை தற்போது எடுத்துவைக்கிறோம்
குறிப்பு: இங்கு அறிஞர்களால் இனங்கானப்படாதவர் என அடையாளப்படுத்தப்படுபவர்கள் அனைவரும் இனங்கானப்படாதவர்கள் என்ற கருத்தில் நாங்கள் இல்லை எனினும் இவ்வாறான நிலையில் குறித்த அறிவிப்பாளரை இனங்கானப்படாதவர் என்று கூறும் வழக்கம் நாம் ஒன்றும் புதிதாக கண்டு பிடித்த கண்டு பிடிப்பல்ல என்பதைப் புரிய வைப்பதே இங்கு நோக்கமாகும்
முதலாவது:
யஸீத் ரக்ப் அல் மிஸ் ரீ:
இவரைப் பற்றி இமாம் அப்பாஸ் என்பவர் இவ்வாறு கூறுகிறார்
يزيد ركب المصري قال عباس الدوري له صحبة(الإصابة:213-2)
யஸீத் என்ற இவர் ஸஹாபியாவார் (அல்இஸாபா-2-213)
அதே யஸீதை இப்னு மன்தஹ் என்ற அறிஞர் இவ்வாறு கூறுகிறார்:
قال بن منده لا يعرف له صحبة(الإصابة:213-2)
யஸீத் என்ற இவர் ஸஹாபியல்ல
தற்போது யஸீத் ஸஹாபியா? அல்லது ஸஹாபி இல்லையா? என்பதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விடுகின்றது
இந்த அறிவிப்பாளரைப் பற்றி இமாம் இப்னுல் அதீர் கூறுவதைப் பாருங்கள்:
وهو مجهول لا تعرف له صحبة قاله ابن منده(أسد الغابة-372-1)
யஸீத் அறியப்படாதவர் அவர் ஸஹாபியல்ல(உஸுதுல் காபா-1-372)
ஒருவர் ஸஹாபியா அல்லது தாபியீயா என்பதில் கருத்து முரண்பாடு ஏற்படும் போது அவரை இனங்கானப்படாதவரின் தரத்திற்கு கொண்டு போனவர் புதிதாக நா ங்களா? அல்லது இப்னுல் அதீரா? மாற்றுத்தரப்பினர்களே! இதற்கு பதில் தாருங்கள்
எனவே யஸீதை ஏனையவர்கள் தரப்படுத்தியிருப்பதை இப்னுல் அதீர் கணக்கெடுக்கவில்லை என்பது இங்கு தெளிவாகின்றது
அல்ஹாரித் இப்னு பத்ல்:
இவரைப் பகவீ போன்றவர்கள் ஸஹாபி எனக் கூறுகின்றனர்
فذكره جماعة في الصحابة كالبغوي ومطين والباوردي وابن شاهين(الإصابة:69-2)
இமாம் இப்னு அஸாகிர் அவரை தாபியீ எனக் கருதுகிறார்
الحارث بن بدل تابعي لا صحبة له(الإصابة-69-2)
ஹாரித் ஸஹாபியல்ல தாபியீயாவார்(அல்இஸாபா -2-69)

தற்போது ஹாரித் ஸஹாபியா? அல்லது தாபியீயா? என்பதில் கருத்துமுரண்பாடு ஏற்பட்டு விடுகின்றது இமாம் அபூஹாதிம் கூறுவதைப் பாருங்கள்
قال أبو حاتم الحارث مجهول)الإصابة_70-2)
ஹாரித் இனங்கானப்படாதவர் ஆவார்(அல்இஸாபா -2-70)
ஒருவர் ஸஹாபியா? அல்லது தாபியீயா? என்ற கருத்து முரண்பாடு ஏற்பட்டும் அவரை மஜ்ஹுல் என்று அபூஹாதிம் கூறுகிறாரே இவர்களின் கண்களை இது மறைத்து விட்டதா? இதற்கும் இவர்கள் பதிளலிக்கக் கடமைப்பட்டுள்ளனர்
மூன்றாவது: முஹம்மதிப்னு ஹிஷாம்
இவரைப் பற்றி காழி அபூஅஹ்மத் இவர் ஸஹாபி என்று கூறுகிறார்
محمد بن هشام ذكره القاضي أبو أحمد العسال في الصحابة)الإصابة-64-6)
முஹம்மதிப்னு ஹிஷாமை காழி அபூஅஹ்மத் ஸஹாபாக்களில் ஒருவராகக் கூறியுள்ளார்
அதே முஹம்மதிப்னு ஹிஷாமை இமாம் அலியிப்னு மத்யனீ இவ்வாறு கூறுகிறார்:
علي بن المديني يقول محمد بن هشام هذا مجهول لا أعرفه(الإصابة:64-6)
முஹம்மதிப்னு ஹிஷாமை எனக்கு தெரியாது
இந்த இரண்டு கருத்திற்கும் பிறபாடு இமாம் இப்னு ஹஜர் அவர் ஒரு தாபியீயாக இருக்கக் கூடும் என்கிறார் இமாம் அலியிப்னு மத்யனீயின் மஜ்ஹுல் என்ற கூற்று தவறு என்றால் இப்னு ஹஜர் அவ்விடத்திலேயே கண்டித்திருப்பார்
இவ்வாறு ஒரு அறிவிப்பாளர் ஸஹாபி என்றும் இல்லை அவர் தாபியீ என்றும் கருத்துவேறுபாடுகள் ஏற்படும் சந்தர்ப்பத்தில் குறித்த அறிவிப்பாளர் இனங்கானப்படாதவர் என்று கூறும் வழக்கம் அறிஞர்களுக்கிடையில் இருந்துள்ளது என்பதற்கு ஒரு பட்டியலைக் கூட தரமுடியும் இருந்த போதிலும் மாற்றுத்தரப்பினர் பதிலளிப்பதற்கு சிரமமாக அமைந்து விடும் என்பதால் அந்தப்பட்டியலை இங்கு தவிர்க்கிறோம் தேவைப்பட்டால் முழுமையாக வழங்குகிறோம்


மாலிகுத்தாரின் அறிவிப்பு சம்பந்தமாக ஸுபி பாத் என்பவர்  முன்வைத்த அறியாமை வாதங்களும் மறுப்புக்களும்

(رحمه الله அவரது வாதம்இமாம் இப்னு கதீர் தமது அல்-பிதாயா வந்-நிஹாயா (7/106) பைஹகீயின் அறிவிப்பை கூறிவிட்டு இந்த அறிவிப்பாளர் தொடர் ஸஹீஹானது என கூறுகிறார்
மறுப்பு: ஒரு இமாம் ஒரு செய்தியை ஆதாரபூர்வமானது என்று கூறுகிறார் அந்த செய்தியின் அறிவிப்பாளரில் விமர்சனம் உள்ளது அதற்கு அவர் பதில் கூறாமல் வெறுமனே செய்தி ஆதாரபூர்வமானது என்கிறார் இச்சந்தர்ப்பத்தில் அச்செய்தியை அவர் ஆதாரபூர்வமானது என்று கூறினாலும் அதை ஏற்கக் கூடாது
அவரது வாதம்: இமாம் இப்னு கதீர் (رحمه اللهமீண்டும் தமது ஜாமிஉல் மஸானீத்தில் (1/223) இதன் அறிவிப்பாளர் தொடர் நல்லதும் பலமானதும் என கூறிகிறார்

பதில்: இமாம் இப்னு கதீர் உமர்(ரழி) அவர்கள் சம்பந்தப்படும் செய்தியை தனது அல்பிதாயாவில் குறிப்பிடுவது உண்மை ஆனால் ஜாமிஉல் மஸானீதில் அவர் குறிப்பிட்டுள்ளதை எம்மால் தேடிய வரைக்கும் காண முடியவில்லை எனவே ஜாமிஉல் மஸானீதின் மூல வாசகங்களை தருமாரு இவ்விடத்தில் வேண்டிக் கொள்கிறோம்

அவரது வாதம்: ஷெய்குல் இஸ்லாம் இமாம் இப்னு ஹஜர் (رحمه الله) தமது பத்ஹுல் பாரியில் (2/495) இந்த அறிவிப்பை பற்றிக்கூறும் போது இப்னு அபீ ஷைபா ஸஹீஹான அறிவிப்பாளர் தொடருடன் அறிவிக்கிறார் எனக் கூறுகிறார்.

மறுப்பு: ஒரு இமாம் ஒரு செய்தியை ஆதாரபூர்வமானது என்று கூறுகிறார் அந்த செய்தியின் அறிவிப்பாளரில் விமர்சனம் உள்ளது அதற்கு அவர் பதில் கூறாமல் வெறுமனே செய்தி ஆதாரபூர்வமானது என்கிறார் இச்சந்தர்ப்பத்தில் அச்செய்தியை அவர் ஆதாரபூர்வமானது என்று கூறினாலும் அதை ஏற்கக் கூடாது

அவரது வாதம்: ஷெய்க் முஹத்தித் மஹ்மூத் சயீத் மம்தூஹ் அல்-மிஸ்ரி இதனை ஸஹீஹ் என உறுதிப்படுத்துகிறார்:

மறுப்பு: தற்போதுதான் ஸுபி பாத்தின் உண்மை முகம் வெளியே வந்துள்ளது மஹ்மூத் ஸயீத் என்பவர் அவர் எழுதிய ரப்உல் மனாரா என்ற நூல் இல்லாவிட்டால் வஸீலாவுக்கு நீங்கள் எந்த ஆதாரமும் காட்டமாட்டீர்கள் அந்த நூலை வைத்துத்தான் காலத்தை நகர்த்துகிறீர்கள் என்பது தற்போது தெளிவாகியுள்ளது அந்த நூலிளுள்ள தவறுகளை ஒவ்வொன்றாக எம்மால் தர முடியும் அந்தளவு தவறுகள் அதில் மலிந்து காணப்படுகின்றன எனவே மஹ்மூத் என்பவர் வஸீலா சம்பந்தமாக மேற்குறித்த செய்தியை ஆதாரமாக முன்வைத்திருப்பது அவரது மிகப் பெரும் தவறாகும் அவர் ஸஹீஹ் என உறுதிப்படுத்தியுள்ளார் என்று அவரை நீங்கள் தக்லீத் செய்வது அறியாமையிலும் அறியாமையாகும்

அவரது வாதம்: இஸ்லாமிய வரலாற்றில் இந்த ஹதீதை பதிவு செய்த ஒரு ஹாபிழ் கூட இந்த ஹதீதை ஷிர்க் என்றோ பித்ஆ என்றோ கூறவில்லை. குறைந்தபட்சம் ழயீஃப் என்றாவது கூறவில்லை

மறுப்பு: ஒரு கருத்து அல்குர்ஆனிலோ அல்லது ஸுன்னாவிலோ தெளிவாகி விட்டால் அந்தக்கருத்தை இதற்கு முன் யாராவது கூறியிருக்கிறார்களா என்று பார்ப்பது கூடாது அதே போன்று ஒரு செய்தியின் போலித்தன்மை எமக்கு ஆதாரபூர்வமாக தெளிவாகி விட்டால் அதன் போலித்தன்மையை இதற்கு முன் யாராவது கூறியுள்ளார்களா? என்று பார்ப்பதும் அறியாமையாகும்

இன்ஷா அல்லாஹ் மாலிகுத்தாரை ஷரீக் இப்னு ஹன்பலுக்கு ஒப்பிடுவது சரியா பிழையா என்பதை அடுத்த ஆய்வுத் தொடரில் தெளிவுபடுத்துகிறோம்
அல்லாஹ் உதவி செய்வானாக

வஸீலா தேடலாமா?



முதலாவது தொடர்
இறந்து போன ஒருவரின் பொருட்டால் அல்லது உயிரோடுள்ள ஒருவரின் பொருட்டால் இறைவனிடம் தேவையை முன்வைப்பதே எமது வழக்கில் வஸீலா என அழைக்கப்படுகிறது வஸீலா எனும் அறபுப் பதம் நெருக்கம் எனும் அர்த்தத்தை உள்ளடக்கியுள்ளது இறைவனிடம் நேரடியா நாம் நெருங்க முடியாது எம்மை விட தரத்தில் உயர்ந்தவர்களின் பொருட்டைக் கொண்டே நெருங்க முடியும் என வஸீலாவை ஆதரிப்போர் வாதிடுகின்றனர் இது இஸ்லாத்தில் சுத்த ஷிர்க்காகும்
வஸீலா என்பது கூடும் என்று வாதிடுபவர்கள் தங்களின் ஷிர்க்கான நடவடிக்கையை நியாயப்படுத்த சில செய்திகளை அவ்வப்போது எடுத்துவைக்கின்றனர் அவர்கள் எடுத்து வைக்கும் செய்திகளின் போலித்தன்மையை சமுதாயத்தில் தோலுரித்து மக்களுக்கு சத்தியத்தை புரிய வைப்பது எமது கடமை என்ற படியால் இவ்வாய்வை இங்கு வெளியிடுகின்றோம்
வஸீலா கூடும் என்று கூறும் அவர்கள் பல செய்திகளை அதற்கு ஆதாரமாக முன்வைக்கின்றனர் அதில் உமர்(ரழி) அவர்கள் சம்பந்தப்படும் செய்தியும் ஒன்றாகும் அந்த செய்தியில் இடம் பெறும் குறைகளை நாம் ஒவ்வொன்றாக எடுத்துக்காட்டவுள்ளோம்
முதலில் அந்த செய்தியை தருகின்றோம்
أَخْبَرَنَا أَبُو نَصْرِ بْنُ قَتَادَةَ ، وَأَبُو بَكْرٍ الْفَارِسِيُّ ، قَالا : أَخْبَرَنَا أَبُو عَمْرِو بْنُ مَطَرٍ ، أَخْبَرَنَا أَبُو بَكْرِ بْنُ عَلِيٍّ الذُّهْلِيُّ ، أَخْبَرَنَا يَحْيَى ، أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ ، عَنِ الأَعْمَشِ ، عَنْ أَبِي صَالِحٍ ، عَنْ مَالِكٍ ، قَالَ : " أَصَابَ النَّاسَ قَحَطٌ فِي زَمَانِ عُمَرَ بْنِ الْخَطَّابِ ، فَجَاءَ رَجُلٌ إِلَى قَبْرِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَقَالَ : يَا رَسُولَ اللَّهِ , اسْتَسْقِ اللَّهَ لأُمَّتِكَ فَإِنَّهُمْ قَدْ هَلَكُوا ، فَأَتَاهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْمَنَامِ ، فَقَالَ : ائْتِ عُمَرَ فَأَقْرِئْهُ السَّلامَ ، وَأَخْبِرْهُ أَنَّكُمْ مُسْقَوْنَ ، وَقُلْ لَهُ : عَلَيْكَ الْكَيْسَ الْكَيْسَ ، فَأَتَى الرَّجُلُ عُمَرَ ، فَأَخْبَرَهُ ، فَبَكَى عُمَرُ ، ثُمَّ قَالَ : يَا رَبُّ ، مَا آلُو إِلا مَا عَجَزْتُ عَنْهُ "
உமர் (رضي الله عنه) அவர்களின் காலத்தில் மக்கள் பஞ்சத்தினால் கஷ்டப்பட்டார்கள். அப்போது ஒரு மனிதர் ரசூல்லாஹ்வின் கப்ருக்கு வருகை தந்து
"அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்விடம் உங்களின் உம்மத்துக்காக வேண்டி மழை பெய்யுமாறு துஆ செய்யுங்கள், ஏனெனில் நிச்சயமாக அவர்கள் அழிந்துவிட்டார்கள்" என்று கூறினார்கள்.

.பின் ரஸுலுல்லாஹ் (صلى الله عليه وسلم)
அவரகள் (அந்த மனிதரின்) கனவில் வந்து " உமரிடம் சென்று (எனது) சலாத்தை கூறுங்கள்" என்றும் இன்னும் "நீங்கள் (மக்கள்) மழை பொழிவிக்கப்படுவீரகள் (எனவும்), நீங்கள் (உமர்) விவேகமாக நடந்து கொள்ளுங்கள், நீங்கள் விவேகமாக நடந்து கொள்ளுங்கள் என்றும் கூறுங்கள்" எனக் கூறினார்.
(பின்) அந்த மனிதர் உமர் (رضي الله عنه) அவர்களிடம் சென்று இதனை அறிவித்தார். (இதனை கேட்ட) உமர் (رضي الله عنه) அழுதார்கள். பிறகு "என்னுடைய இரட்சகனே! எனது சக்திக்கு அப்பாற்பட்டதை தவிர நான் எதையும் முயற்சி செய்யாமலில்லை" என கூறினார்கள்
ஆதாரம்:
தலாயிலுன் நுபுவ்வா
முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா
வஸீலா கூடும் என்பதற்கு இவர்கள் முன்வைக்கும் ஆதாரங்களில் இதுவும் ஒன்றாகும் இப்போது அவர்கள் முன்வைத்துள்ள செய்தியில் காணப்படும் குறைகளை ஒவ்வொன்றாக நோக்குவோம்
மாலிகுத்தாரை ஏன் ஏற்க மறுக்கிறோம்?.

மேற்குறித்த செய்தியில் ஏகப்பட்ட குறைகள் உள்ளன ஒவ்வொரு குறைகளாக இதை அலசுவோம்
முதலாவது குறை: இதில் இடம் பெறும் மாலிக் என்ற அறிவிப்பாளரை ஏற்க முடியாது
முதலில் மாலிகுத்தார் யார்? என்ற விபரத்தை சற்று நோக்குவோம்
இவரது முழுப் பெயர்: மாலிக் இப்னு இயாழ் அல் ஜுப்லானீ(உமர்(ரழி) யின் அடிமை)
இவர் அபூபக்ர்(ரழி), உமர்(ரழி), அபூஉபைதா(ரழி), முஆத்(ரழி) ஆகிய நான்கு ஸஹாபாக்களிடம் கேட்டு அறிவிப்பு செய்துள்ளார் இவரிடமிருந்து அபூஸாலிஹ் அஸ்ஸம்மான், அப்துர்ரஹ்மான், அஃன் இப்னு மாலிக், அப்துல்லாஹ் ஆகியோர் கேட்டு அறிவிப்பு செய்துள்ளனர் உமர்(ரழி) அவர்களோடு பைத்துல் மக்திஸின் வெற்றியில் இவரும் கலந்து கொண்டார்(பார்க்க: தாரீஹு திமிஷ்க்-56-489)
மாலிகுத்தார் சம்பந்தமாக நாம் எடுத்துக் கூறிய மேற்குறித்த கருத்தை எமது எதிர் தரப்பினரும் ஏற்றுள்ளனர் அதனால் அதைப் பற்றி விரிவாக அலச வேண்டியதில்லை
இந்த மாலிகுத்தாரை சில அறிஞர்கள் ஸஹாபி என்றும் சில அறிஞர்கள் அவரை தாபியீ என்றும் கூறுகின்றனர் இதை வைத்து அவர் ஸஹாபியாக இருந்தால் அவரது நம்பகத்தன்மை பற்றி கேள்வி கேட்க முடியாது அவர் தாபியீயாக இருந்தால் தாபியீயாக இருக்கும் அவரை அறிஞர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர் என்று வாதிடுகின்றனர் இந்த வாதம் வெளிப்படையில் நியாயமானதாக தோன்றினாலும் அதில் எவ்வித உண்மையும் கிடையாது
பொதுவாக ஒரு அறிவிப்பாளரை ஏற்றுக் கொள்வதென்றால் அவரது நம்பகத்தன்மை உறுதி செய்யப்படுவது போல் அவரது மனனத் தன்மையும் உறுதிப்படுத்தப்படல் வேண்டும் இதுவே ஹதீஸ்கலையின் விதியும் கூட
ஒருவர் நல்லவராக இருப்பது மாத்திரம் ஹதீஸை ஏற்றுக் கொள்வதற்கு உதவாது மாறாக அவரது மனனத் தன்மையும் உறுதி செய்யப்பட வேண்டும் எமது மாற்றுக்கருத்திலுள்ளவர்கள் கூட தொழுகையில் நெஞ்சில் தக்பீர் கட்டுவது சம்பந்தமான ஹதீஸில் இடம் பெறும் ஸிமாக்கை ஏற்க மறுக்கின்றனர் காரணம் கேட்டால் அவரது மனன சக்தியில் குறை உள்ளது என விமர்சிக்கின்றனர் எனவே நம்பகத்தன்மை எவ்வளவு முக்கியமோ அந்தளவு ஒரு ராவியின் மனனத் தன்மையும் இன்றியமையாத ஒன்றாகும் என்பதை அவர்களும் ஏற்றுள்ளனர். மாலிகுத்தாரை தரப்படுத்திய எந்த அறிஞர்களும் அவரது மனனத் தன்மை பற்றி எதுவுமே கூறவில்லை
.