Sunday, March 25, 2012

தர்ஹாவுக்கு முன்னால் NTJ யின் மூன்றாவது தெருமுனைப்பிரச்சாரம்


அல்லாஹ்வின் பேருதவியால் காத்தான்குடியிலுள்ள Dr.அஹ்மட் பரீட் மாவத்தை வீதியில் அமையப்பெற்றுள்ள முஹ்ஸின் மௌலானா தர்ஹாவுக்கு முன்னால் தேசிய தௌஹீத் ஜமாஅத் தனது மூன்றாவது தெருமுனைப்பிரச்சாரத்தை மேற்கொண்டது அசத்தியம் நடைபெறும் அவ்விடத்திலேயே கூட்டம் நடைபெற்ற படியால் பலர்களும் அதில் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்! இஸ்லாத்தில் கப்ரு வழிபாட்டின் விபரீதம் பற்றியும் அல்லாஹ்வை மாத்திரம் வழிபடுவதின் முக்கியத்துவம் பற்றியும் உரையில் தெளிவுபடுத்தப்பட்டது மேலும் அவ்விடத்திலேயே ஒரு துண்டுப்பிரசுரமும் வினியோகிக்கப்பட்டது
அசத்தியம் நடைபெறும் இடத்திற்கு சென்று அதன் விபரீதத்தை உணர்த்துவது நபிமார்கள் அனைவரும் மேற்கொண்ட முக்கிய பிரச்சாரப்பணியாகும் அவ்வாறு எடுத்துக் கூறுகின்ற போதே பலவிதமான எதிர்ப்புகள் அவ்விடத்திலேயே தோன்றும் வாய்ப்பை நன்றாகவே நபிமார்கள் அறிந்திருந்தும் அதை விட்டும் பின்வாங்கவில்லை

இன்ஷா அல்லாஹ் மிக விரைவில் காத்தான்குடியில் ஷிர்க் நடைபெற்று வரும் மற்றுமொரு இடத்தில் எமது நான்காவது தெருமுனைப்பிரச்சாரத்தை மேற்கொள்ளவுள்ளோம்
தற்போது தெருமுனைப்பிரச்சாரத்தின் 2 தொடர்கள் வெளியிடப்பட்டுள்ளன அதைக் காண இங்கே கிளிக் செய்யவும்
http://www.youtube.com/watch?v=Gpez7S3DpLA&feature=g-all-u&context=G2adf8d5FAAAAAAAABAA

2-http://www.youtube.com/watch?v=FysZ1a9XPhk&feature=g-all-u&context=G2730726FAAAAAAAAAAA

Wednesday, March 7, 2012

தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் தெருமுனைப்பிரச்சாரம்


அல்லாஹ்வின் பேருதவியால் 07-03-2012 ஆகிய இன்றைய தினம் தேசிய தௌஹீத் ஜமாஅத் தனது தெருமுனைப் பிரச்சாரத்தை முதலாவதாக தொடங்கியது இஸ்லாத்தை அசல் வடிவில் எடுத்துக் கூறுவதற்கு மிகவும் சிறந்ததொரு வாய்ப்பாக அமைந்த இந்த தெருமுனைப் பிரச்சாரம் உண்மையில் சமுதாயத்தில் மிகப் பெரிய மாற்றத்தை உண்டுபண்ண வல்லது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை

இன்று இஸ்லாத்தை எடுத்துரைப்பதற்கு பல்வேறு பட்ட நவீனசாதனங்கள் இருந்தும் தெருமுனைப்பிரச்சாரத்தை நாம் கையிலெடுத்ததற்கு யதார்த்தமான காரணி இதுதான்
அதாவது நபிமார்கள் இவ்வுலகில் இஸ்லாத்தை எடுத்துரைத்த சரித்திரங்களை நாம் புரட்டிப்படித்தால் மக்களை சந்திக்கும் சந்தர்ப்பங்களிலெல்லாம் இத்தூய மார்க்கத்தை அவர்கள் எடுத்துரைத்துரைப்பதில் பின்வாங்கியது கிடையாது மேலும் எடுத்துரைக்கும் சந்தர்ப்பத்தில் ஏற்படும் இன்னல்களால் அவர்கள் தஃவாக்களத்திலிருந்து சடைவடைந்ததும் கிடையாது இதற்கு ஏகப்பட்ட சான்றுகள் உண்டு

இந்த அடிப்படையில் தேசிய தௌஹீத் ஜமாஅத் தனது முதலாவது தெருமுனைப்பிரச்சாரத்தை ஆரம்பித்து வைத்தது ஜமாஅத்தின் பிரச்சாரகர் M.C.M ஸஹ்றான் "இஸ்லாம் என்றால் என்ன?" என்ற கருப்பொருளில் தனது சொற்பொழிவை ஆற்றினார் உரையில் ஷிர்க்கின் விபரீதம், இஸ்லாத்தை அறிந்து பின்பற்றுதலின் முக்கியத்துவம் போன்ற பல்வேறு விடயங்களை தெளிவுபடுத்தினார் பலர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்!
 அந்நிகழ்வின் சில படங்களை தற்போது வழங்குகிறோம்





மிக விரைவில் இதன் வீடியோவை அப்லோட் செய்கிறோம்